‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் சேர்ந்து தனம் அண்ணி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்துடன் சேர்ந்து தனம் அண்ணி செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்துடன் சேர்ந்து தனம் அண்ணி செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் சேர்ந்து தனம் அண்ணி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பொதுவாக டிவி சீரியல்களில் அடித்து, பிடித்து, முட்டி மோதிக்கொள்ளும் நடிகர், நடிகைகள் அனைவரும் நிஜத்தில் அதாவது திரைக்கு பின்பாக நல்ல நட்புடன் பழகி வருவது வழக்கமானது. அதனால் சீரியல் அல்லது சினிமா ஷூட்டிங் ஸ்பாட்கள் எப்போதுமே கல்லூரி வளாகம் போல கலகலப்பாக காணப்படும். அந்த வகையில் திரைக்கு பின்பாக நடிகர், நடிகைகள் அடிக்கும் லூட்டிகள், சேட்டைகள் என பலவும் அவ்வப்போது புகைப்படங்களாகவோ அல்லது வீடியோக்களாகவோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடக்கப்போகும் கோபி & ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதுவும், தமிழ் சீரியல்களில் டாப் இடத்தில் இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளின் படப்பிடிப்பு வீடியோ ரசிகர்களின் பேவரைட்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏனென்றால் இந்த சீரியலில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் இளமையானவர்கள் என்பதால் இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் ஃபன் நிறைந்ததாக காணப்படும். இப்படி இருக்க, சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடை திறப்பு விழா தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருந்தது.

போதையில் மீனாவிடம் உளறும் ஜீவா, உண்மையை தெரிந்து கொள்ளும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த வாரம்!

இந்த எபிசோடு வெளியாவதற்கு முன்பாகவே இந்த காட்சிகளுக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வகையில் தற்போது, கூட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை திறப்பு விழா படப்பிடிப்பில் வைத்து நடிகை சுஜிதா, கம்பம் மீனா, சரவண விக்ரம், சாய் காயத்ரி, ஸ்டாலின், குமரன், வெங்கட், முல்லை என அனைவரும் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். இந்த வீடியோவில், மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பமும் இடம்பெற, உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here