பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடி மகிழ்ந்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரல் வீடியோ!

0
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடி மகிழ்ந்த 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரல் வீடியோ!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடி மகிழ்ந்த 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரல் வீடியோ!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடி மகிழ்ந்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரல் வீடியோ!

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஆடி மகிழ்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அருண்:

சின்னத்திரையின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடரின் நாயகன் அருண் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளார். கதையின் மாற்றத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்க கூடியவர். தற்போது பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் நீதிபதி ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ உத்தரவிட்டிருக்கிறார். இதனால் பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே பாரதியின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நிம்மதி அடைகின்றனர். ஆனால் பாரதியோ கண்ணம்மாவை தொல்லை செய்து போதும் டா சாமி நீ கெளம்பு என்று சொல்ல வைக்கும் படி செய்ய இருப்பதாக கூறி அறுவது ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

பிரியங்காவுடன் முட்டிக் கொண்ட தாமரை, ஏற்றி விடுவது போல டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் – ப்ரோமோ ரீலிஸ்!

ஆனால் ரசிகர்கள் கண்ணம்மாவுடன் சேர்ந்து இருக்கும் நாட்களில் பாரதி கண்ணம்மாவை பற்றி புரிந்து கொண்டு திருந்தி விடுவார் என்று எதிர்பார்க்கின்றனர். கண்ணம்மாவும் பாரதி வருவதற்காக மிகவும் சந்தோசமாக இருக்கிறார். இந்நிலையில், சிறையில் இருக்கும் வெண்பா அஞ்சலிக்கு செய்த பெரிய தவறை நினைத்து பாரதி வெண்பா மீது கடும் கோவத்தில் இருக்கிறார். இதனால் கால் செய்யும் வெண்பாவை திட்டி இனி எனக்கு போன் செய்யாதே என்று கூறி வைத்து விடுகிறார். பாரதி வெண்பா மீது கோவமாக இருப்பதை அறிந்த வெண்பா புதிதாக எந்த சதித்திட்டம் தீட்ட இருக்கிறார் என்று வரும் வாரங்களில் தான் தெரிய வரும்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் உடன் இணைந்த வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில், பாரதியாக நடிக்கும் நடிகர் அருண், கடந்த வாரம் டெல்லிக்கு பயணித்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தகவலை வெளியிட்டிருந்தார். அங்கிருந்து வட மாநிலங்களில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். இந்நிலையில், நடிகர் அருணிற்கு இன்று பிறந்த நாள் விழா, தனது பிறந்த நாளை ஒரு உணவகத்தில் ஆடி, பாடி கொண்டாடுவது போல் வீடியோ ஒன்றை அருண் வெளியிட்டுள்ளார். மேலும், அங்கிருக்கும் ஒரு நபரும் அருணோடு சேர்ந்து ஆடுவது போல் உள்ளது. இந்த வீடியோவை அருண் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனால் அருணின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!