பிரியங்காவுடன் முட்டிக் கொண்ட தாமரை, ஏற்றி விடுவது போல டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் – ப்ரோமோ ரீலிஸ்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் எட்டாவது வாரம் தொடங்கி உள்ளது. இன்றைய எபிசோடில் தாமரை மற்றும் பிரியங்காவிற்கு இடையே சண்டை வருகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 55 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடி வருகின்றனர். கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் அன்பு, பாசம் என அனைத்தையும் தாண்டி போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை ஏழு வாரத்தில் இல்லாத அளவில் எட்டாவது வார போட்டியாளர்கள் குணம் மாறி உள்ளது. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் உடன் இணைந்த வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த வார தொடக்கத்தின் முதலேயே பிரியங்கா மற்றும் தாமரைக்கு முட்டிக் கொண்டுள்ளது. கடந்த வாரம் அவர்களுக்கு இடையே பாச போராட்டம் நடந்தது. ஆனால் இந்த வாரம் அப்படியே எதிராக மாறி உள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக நிரூப் இருக்கிறார். ஆனால் நிரூப் மற்ற போட்டியாளர்கள் தலைவராக இருக்கும் போது பேச்சை கேட்காத காரணத்தால் அவருடைய பேச்சை கேட்க மாட்டேன் என இமான் மற்றும் வருண் பிடிவாதம் செய்தனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா செய்துள்ள காரியம் – வைரலாகும் வீடியோ!
தற்போது வெளியான ப்ரோமோவில் பிரியங்கா தாமரை இடையே சண்டை மூட்டிவிட அனைத்து வேலைகளையும் பிக்பாஸ் செய்துள்ளார். அதில் தாமரை பிரியங்கா பற்றி பேச கோவப்பட்ட பிரியங்கா எப்படி எல்லாம் இருக்காங்க முன்னாடி ஒரு மாதிரி பின்னாடி ஒரு மாதிரி பேசுறாங்க. இப்படி இருப்பாங்க என்று நினைக்கவே இல்லை என்பது போல பேசுகிறார். பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக இருந்தாலும் அதற்கு சமமாக தாமரை ரசிகர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.