அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த அதிரடி உத்தரவு!

0
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதியம் குறித்த அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதியம் குறித்த அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த அதிரடி உத்தரவு!

அனைத்து அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு பென்சன் கிடைக்கிறது. இதற்கான விதிமுறையின்படி, ஓய்வுக்குப் பிறகு ஊழியர் இறந்துவிட்டால், அவர்களின் நாமினிக்கு பென்சன் தொகை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையில்லை என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு:

ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பென்சன் தொகையை வழங்குவதற்கு ஓய்வூதியம் விதி பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், இருவரும் இறந்த பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப பென்சன் கிடைக்கும். மேலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உறுப்பினர்களில் ஒருவர் இறந்தால், மற்ற உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி) குடும்ப பென்சன் வழங்கப்படும். மேலும் ஓய்வுக்குப் பின் இருவரும் இறந்து விட்டால், குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையில்லை என ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இது தொடர்பாக இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு கூறுவது என்னவென்றால், இமாச்சலபிரதேச காவல்துறையில் 1983 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் பஹொலா ராம். மேலும் பஹொலா ராம் கடந்த 2002-ம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு பஹொலா ராமிற்கு ராம்கு தேவி மற்றும் துர்கி தேவி என 2 மனைவிகள் உள்ளனர். இதையடுத்து குடும்ப ஓய்வூதியத்திற்கு பஹொரா ராம் தனது 2வது மனைவி துர்கி தேவியின் பெயரையும் சேர்த்துள்ளார். இந்த நிலையில், பஹொலா ராம் உயிரிழந்த பின்னர் குடும்ப ஓய்வூதியம் அவரது முதல் மனைவி ராம்கு தேவி பெற்று வந்தார்.

தமிழக ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயம்? வலுக்கும் கோரிக்கை!

ஆனால், ராம்கு தேவி கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராம்கு தேவியின் மரணத்தை அடுத்து குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென பஹொலா ராமியின் 2வது மனைவி துர்கி தேவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜொதிஸ்னா ரிவால் டுவ், முதல் மனைவி இருக்கும்போதே பஹொலா ராமி மனுதாரரை 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். அதனால் 2-வது மனைவியாக குடும்ப ஓய்வூதியம் பெற துர்கி தேவிக்கு உரிமை இல்லை என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!