தமிழக ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயம்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் சின்ன வெங்காயம்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ரேஷன் கடைகள்:

தற்போதைய தமிழக அரசு விவசாயிகளுக்கு பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டங்களுக்காக குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதை தவிர, மழை காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் புதிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வை பை இணையதள வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை தவிர தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த குடும்ப பெண்களுக்கு ரேஷன் கடைகளில் மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை சரிந்து காணப்படுகிறது.

TNPSC வனத்தொழில் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் – ரூ.1,38,500 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!

இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் 45 நாட்கள் ஆன சின்ன வெங்காயத்தை நோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஆணைப்படி கோயம்புத்தூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத அதிகாரிகளின் மீது கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணி மற்றும் பொதுப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் மனு அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!