கலர்ஸ் டிவியில் ‘அபி டெய்லர்’ சீரியல் நடிகை மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

0
கலர்ஸ் டிவியில் 'அபி டெய்லர்' சீரியல் நடிகை மாற்றம் - ரசிகர்கள் ஷாக்!
கலர்ஸ் டிவியில் 'அபி டெய்லர்' சீரியல் நடிகை மாற்றம் - ரசிகர்கள் ஷாக்!
கலர்ஸ் டிவியில் ‘அபி டெய்லர்’ சீரியல் நடிகை மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, தொடர்களுக்கு என்றே பேர்பெற்ற சன் டி.வி, விஜய் டி.வி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் போட்டி போட்டு முன்னேறி வருகிறது. அப்பேற்பட்ட கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் டிவி வில்லி வெண்பா தற்போது இந்த சீரியலை விட்டு விலகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

அபி டெய்லர் :

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் காதல் மற்றும் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு ஆரம்பமாகிய அபி டெய்லர் சீரியலில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் அறிமுகமாகிய ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் ஹீரோ அசோக் ஆக மதனும், ஹீரோயின் அபிராமி கதாபாத்திரத்தில் ரேஷ்மாவும் ஜோடியாக நடித்து ரசிகர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறார்கள்.

குழந்தைகள் உணவில் விஷம் கலந்தது கோபியா? உண்மையை கண்டுபிடிக்கும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும், விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடர் வில்லியாக மக்கள் மத்தியில் பிரபலமாகிய ஃபரீனாவும் அபி டெய்லர் சீரியலில் பவானி என்ற ரோலில் நடித்து வருகிறார். இவரை ஃபரீனா என்று சொல்வதை விட வெண்பா என்று சொன்னால்தான் நிறைய பேருக்கு தெரிய வரும். அந்த வகையில் இவர் இந்த சீரியலில் நடித்ததால் ரசிகர்கள் எல்லாரும்’ பாரதி கண்ணம்மா சீரியலில் இனி நடிக்க மாட்டீங்களா? ‘ என்று கேள்விகளை எழுப்பி வந்த சமயத்திலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால், திடீரென கலர்ஸ் டிவி சீரியலை விட்டு விலகி ஃபரீனா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று அவர் தரப்பில் இருந்து எவ்விதமான தகவல்களும் வெளிவரவில்லை. மேலும், ஃபரீனா நடித்த பவானி கதாபாத்திரத்தில் தற்போது அவருக்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜபார்வை’ சீரியலில் பவித்ரா கேரக்டரில் நடித்து பிரபலமாகிய கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இவர் ஹீரோயின் அபிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!