அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆதார் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆதார் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் இணைப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் தங்களது ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை
விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் இணைப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களது ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்தால் அரசு தரும் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். முன்னதாக இந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், பணி நிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் ரேஷன் சேவைகளை தடையின்றி பெற்றுக்கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு பயனர் நாட்டின் எந்தவொரு மூலையிலும் சென்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

பிப்.21ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – அரசு முக்கிய உத்தரவு!

இத்திட்டம் மேரா ரேஷன் என்ற ஆப் வடிவில் பயனர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதாவது, இந்த செயலி மூலம் பயனர்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளை அறிந்து கொள்ள முடியும். அதே போல ரேஷன் டீலர்கள், பொருட்களின் அளவு போன்ற விவரங்களையும் இந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ சேவைகள் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேர்ந்து பயனடைய விரும்புபவர் முதலாவதாக ரேஷன் அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இப்போது ஆன்லைன் மூலம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் ஆதார் அட்டையை இணைக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக காணலாம். அந்த வகையில் முதலாவதாக,

  • ஆதார் ஆணையத்தின் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அங்கு Start Now என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் முகவரி, மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • பிறகு Ration Card Benefit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதில், ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்கவும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அந்த OTP ஐ உள்ளிட்ட பிறகு செயல்முறை முடிந்த செய்தி கிடைக்கும்.
  • இதற்கு பிறகு உங்கள் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
  • இது தவிர பயனர்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் அட்டைதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை ரேஷன் மையத்தில் சமர்ப்பித்தும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!