ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி வரும் சேவைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீடு தேடி வரும் சேவைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீடு தேடி வரும் சேவைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி வரும் சேவைகள்!

ஆதார் கார்டில் உள்ள திருத்தங்களை செய்ய மொபைல் அல்லது ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் அளவுக்கு வசதியை ஆதார் சேவை மையம் ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கிராம மக்களுக்கு பயன் பெறும் வகையில் வீடு வீடாக சென்று ஆதார் சேவைகள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் கார்டு

ஆதார் கார்டு என்பது ஒரு தனி மனித அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் கார்டில் 12 இலக்க அடையாள எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடையாள அட்டை எண் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும். இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டில் வயது, பாலினம்,மொபைல் நம்பர், பெயர், பிறந்ததேதி மற்றும் முகவரி போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் உடற்கூறுகள், பத்து விரல் ரேகைகள், இரு கருவிழி பதிவுகள் மற்றும் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பயிற்சி நாட்கள் பணிக்காலமாக மாற்றம்!

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி, ஆதார் கார்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதார் கார்டை வைத்து வங்கியில் கணக்கு தொடங்கவும், ஓட்டுநர் உரிமம் பெறவும், EMI க்கு மொபைல் அல்லது வாகனம் வாங்குவதற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கின் போது பொது இடங்கள் கோவில்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கும் செல்ல ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியமானதாக கருதப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ஆதாரில் மாற்றங்களை செய்ய இதற்க்கான தனிப்பட்ட ஒரு போர்ட்டலாக UIDAI என்ற தளம் உள்ளது. அப்படி மாற்ற விரும்பினால் மொபைல் வாயிலாக அல்லது ஆன்லைன் மூலம் UIDAI என்ற தளத்திற்கு சென்று மாற்றலாம். இணைய சேவை இருக்கும் பகுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் இதனை ஈஸியான முறையில் செய்கிறார்கள். ஆனால், இணைய சேவை இல்லாத பல கிராமங்கள் மற்றும் சிற்றூர்கள் மாற்றங்களை செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றன. கிராம பகுதிகளுக்கு உதவும் வகையில் ஆதார் சேவையின் அடுத்தக்கட்டமாக வீடு வீடாக சென்று ஆதார் சேவைகள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here