ஆதார் அட்டை தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!

0
ஆதார் அட்டை தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!
ஆதார் அட்டை தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!
ஆதார் அட்டை தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!

நாடு முழுவதும் மக்களுக்கு முக்கிய ஆவணமான ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் அதனை மீண்டும் எவ்வாறு UIDAI இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் அட்டை:

நாடு முழுவதும் உள்ள மக்கள் வருமான வரி தாக்கல் செய்வது முதல் பான் கார்டு வரை பல சேவைகளுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாக உள்ளது. ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க அடையாள எண் உங்களது விவரங்கள் குறித்து அடையாளம் காண முக்கிய சான்றுகளில் ஒன்றாக உள்ளது. ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் தேவைப்படுகிறது. UIDAI இணையதளம் மூலமாக ஆதார் குறித்த விவரங்களை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகள், செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அத்தகைய முக்கிய ஆவணமான ஆதார் அட்டையை தவறுதலாக தொலைத்து விட்டால் சில எளிய வழிமுறைகள் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். UIDAI அதற்கான வழிகளை வழங்கி உள்ளது. இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ஆதார் அட்டையை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான uidai.gov.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • அதில் Get Aadhaar என்ற சேவையில் Download Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீட வேண்டும்.
  • உங்கள் ஆதார் எண்ணின் முழு இலக்கங்களைக் காட்ட விரும்பவில்லை என்றால் ‘முகமூடி ஆதார்’ விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின்னர் CAPTCHA உள்ளீடு செய்து Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பின்னர் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும், பிறகு OTPயை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்க ‘Verify and Download’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • மொபைல் எண் இல்லாதவர்கள் Enrolment ID, Virtual ID மூலமாகவும் ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!