Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வெறும் 5 ரூபாய்க்கு 1 GB டேட்டா!
Airtel நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 1GB அளவிலான அதிவேக இணைய வசதியை வெறும் ரூ.5 என்ற குறைந்த விலையில் வழங்கும் ப்ரீபெய்டு திட்டம் பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
Airtel ப்ரீபெய்ட் திட்டம்:
தற்போது கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இணையத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. இதனால் OTT தளங்களின் சந்தாக்களும் மக்களுக்கு ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது.
ஆதார் அட்டை தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!
அந்த வகையில் நாட்டின் முன்னணி நிறுவனமான Airtel தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணையத்தை மிகவும் குறைந்த விலையில் வழங்கும் வகையிலான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையிலான அதிவேக 5 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகளை ஒதுக்கியுள்ளது. அதில் Airtel நிறுவனமும் சோதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் விரைவில் Airtel 5ஜி சேவையையும் வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
Airtel ன் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்கள் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்கி வருகிறது. அதனுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியின் OTT நன்மையை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டம் மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டாவை ரூ.448 க்கு வழங்குகிறது. அதவாது ஒரு GB டேட்டா தோராயமாக ரூ.5.3 ஆகும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டியில் கிடைக்கிறது.