ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகள், செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா புதிய வழக்குகள் குறைந்து வரும் நிலையில், பள்ளிகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதியும், கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் மீண்டுமாக திறக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
உத்தரபிரதேசத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகள் அனைத்தும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட உள்ளன. அதேபோல், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பின் படி கல்வி நிறுவனங்களில் 50% மாணவர்கள் வருகை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்களுக்கு அதிகளவு பேருந்து கட்டணம் வசூல் – OPS அறிக்கை!
இதேபோல், பள்ளிகள் வகுப்புகளை நடத்தும்போது கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
சமீபத்தில் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக் கமிஷன் வழிகாட்டுதல்களின்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 முடிவடையும் எனவும் புதிய வகுப்புகள் அக்டோபர் 1 முதல் தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் 650 க்கும் குறைவான கொரோனா வழக்குகள் உள்ளதாகவும், 58 மாவட்டங்களில் புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய விரிவான நெறிமுறைகள் அரசாங்கத்தால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.