வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு அவசியம் – முக்கிய அறிவுறுத்தல்!

0
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு அவசியம் - முக்கிய அறிவுறுத்தல்!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு அவசியம் - முக்கிய அறிவுறுத்தல்!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு அவசியம் – முக்கிய அறிவுறுத்தல்!

அனைத்து வாக்காளர்களும் அவர்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு:

முன்னதாகவே அனைத்து வாக்காளர்களும் தானாக முன் வந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஏனெனில், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேலாக இடம் பெறாமல் இருப்பதை தடுத்திடவும் இந்த ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி 2022: நாளை வங்கிகள் மூடப்படுமா? முக்கிய விளக்கம் இதோ!

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 6 பி படிவத்தை பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் கொடுப்பதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதன் படி நாடு முழுவதும் கடந்த மாதம் 1 ந் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், வாக்காளர்கள் https://www.nvsp.in/என்ற இணையதளம் வாயிலாகவும், Voters Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, வங்கி மற்றும் அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!