கிருஷ்ண ஜெயந்தி 2022: நாளை வங்கிகள் மூடப்படுமா? முக்கிய விளக்கம் இதோ!

0
கிருஷ்ண ஜெயந்தி 2022: நாளை வங்கிகள் மூடப்படுமா? முக்கிய விளக்கம் இதோ!
கிருஷ்ண ஜெயந்தி 2022: நாளை வங்கிகள் மூடப்படுமா? முக்கிய விளக்கம் இதோ!
கிருஷ்ண ஜெயந்தி 2022: நாளை வங்கிகள் மூடப்படுமா? முக்கிய விளக்கம் இதோ!

நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. அதனால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவரமாக இந்த பதிவில் காணலாம்.

வங்கி விடுமுறை:

நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் கடந்துவிட்டன. ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, இந்த மாதத்தில் ஏற்கனவே 10 வங்கி விடுமுறைகள் கடந்துவிட்டன. இன்னும் 8 விடுமுறைகள் உள்ளன. இந்த 8 விடுமுறை நாட்களில் ஆகஸ்ட் 19 முதல் 3 தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் பொருந்தாது. இந்த மூன்று நாட்களில் வங்கி வேலை உள்ளவர்கள், தங்கள் வங்கி எந்த நாளில் வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. நாட்டில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகின்றன.

சபரிமலை கோவிலில் மலையாள புத்தாண்டு சிறப்பு பூஜை – நடை திறப்பு!

எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வங்கிகளுக்கு கிருஷ்ணாஷ்டமி விடுமுறை நாள் வேறுபடும். ஜன்மாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை தேதி குறித்து பல குழப்பங்கள் உள்ளன. வங்கிகள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குப் பதிலாக ஆகஸ்ட் 19ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும் டெல்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு ஜன்மாஷ்டமியின் போது விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆகஸ்ட் 18 ஜன்மாஷ்டமி வங்கிக்கு விடுமுறை:
  • புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோவில் வியாழன் அன்று வங்கிகள் மூடப்படும்.
  • நாளை ஆகஸ்ட் 19 ஜன்மாஷ்டமி வங்கி விடுமுறை:
  • ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவண வத்-8)/ கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
  • அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்படும்.
  • ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (சனிக்கிழமை)
  • ஐதராபாத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி கிருஷ்ணாஷ்டமி விழா கொண்டாடப்படுவதால், அந்த பகுதியில் உள்ள வங்கிகள் மட்டும் செயல்படாது. மறுபுறம், ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.
  • ஜன்மாஷ்டமியின் போது இந்த நகரங்களில் வங்கிகள் திறந்திருக்கும்: அகர்தலா, ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, கவுகாத்தி, இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி மற்றும் திருவனந்தபுரம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here