அரசு விடுத்த வினோத உத்தரவு.. ஊழியர்கள் Social Media பயன்படுத்த தடை – காரணம் என்ன?

0
அரசு விடுத்த வினோத உத்தரவு.. ஊழியர்கள் Social Media பயன்படுத்த தடை - காரணம் என்ன?
அரசு விடுத்த வினோத உத்தரவு.. ஊழியர்கள் Social Media பயன்படுத்த தடை - காரணம் என்ன?
அரசு விடுத்த வினோத உத்தரவு.. ஊழியர்கள் Social Media பயன்படுத்த தடை – காரணம் என்ன?

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதிலிருந்து மீண்டு வர முடியாமல் மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள்:

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து நாடுகளும் வருவாய் இழப்பை சந்தித்தது. ஏனெனில் மக்கள் தொற்று அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கினர். வேலையிழந்து தவிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கையும் பொருளாதார சரிவால் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார்.

அப்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்கி உதவியது. அதுமட்டுமில்லாமல் உலக வங்கியானது கடன் உதவி அளித்தது. விலைவாசி உயர்வால் தவித்த மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது வரை இலங்கை பழைய நிலைக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்த வண்ணம் உள்ளது. மேலும் உணவு பற்றாக்குறையால் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. போதிய உணவின்றி பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.1) மின்தடை அறிவிப்பு – எந்த ஏரியா தெரியுமா?

Exams Daily Mobile App Download

இத்தகைய சூழலுக்கு மத்தியில் இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஒரு பொதுவான அரசு அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடுவது ஒழுங்கு நடவடிக்கைக்குரிய குற்றம் என்று தெரிவித்துள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!