தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC CESE தேர்வுக்கான Provisional List-ஐ தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
TNPSC CESE Provisional List:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ம் தேதி Combined Engineering Services (TNPSC CESE) தேர்வுக்கான அறிவிப்பை (Notification No.10/2022) தனது இணையதளத்தில் வெளியிட்டது. இத்தேர்வு மூலம் Assistant Engineer, Automobile Engineer, Junior Electrical Inspector, General Foreman, Technical Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இத்தேர்வின் முதற்கட்டமான எழுத்து தேர்வானது 26.06.2022 அன்று நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது.
அரசின் உதவித்தொகை உயர்வு – விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமா?
இதனை தொடர்ந்து இப்பணிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு கலந்தாய்வு ஆனது 03.02.2024, 04.02.2024 அன்றும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்பணிகளுக்கு TNPSC CESE தேர்வு மூலம் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் Provisional List நேற்று (12.02.2024) https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.