அரசின் உதவித்தொகை உயர்வு – விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமா?  

0
அரசின் உதவித்தொகை உயர்வு - விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமா?  

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மத்திய அரசானது விவசாயிகளுக்கான பி.ம். கிசான் தொகையை விரைவில் உயர்த்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிம். கிசான் தொகை:

இந்திய அரசால் பி.ம். கிசான் திட்டம் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது சிறு மற்றும் குறு நில விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் 16 வது தவணை தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இம்மாத துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இத்திட்டத்தின் உதவித்தொகை உயர்வு குறித்து தகவல் இடம்பெறும் என விவசாயிகள் பெருமளவில் எதிர்பார்த்தனர். இறுதியில் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

இன்ஸ்டாகிராமின் சூப்பர் அப்டேட் – இனி Profile பக்கத்திலேயே இதை பெறலாம்!!

இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் மத்திய அரசு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பி.ம். கிசான் திட்டத்தின் உதவித்தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விவசாயிகளுக்கான இந்த திட்டத்தின் மதிப்பு உயர்த்தப்பட்டால் தற்போது ஒரு தவணைக்கு ரூ.2000/- வீதம் ஒரு ஆண்டுக்கு மூன்று முறையாக பிரித்து வழங்கப்படும் ரூ.6,000/- இரட்டிப்பாக்கப்படும். அதாவது ஒரு தவணைக்கு ரூ.4000/- வீதம் ரூ.12,000/- ஒரு ஆண்டுக்கான ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!