SSC GD Constable 20,000+ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே…!

0
SSC GD Constable 20,000+ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே...!
SSC GD Constable 20,000+ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே...!
SSC GD Constable 20,000+ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே…!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது. இப்பதவிகளுக்கு என மொத்தம் 24369 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.

தற்போது இதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்று, SSC வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, Constable பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 24369 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 20915 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது மொத்தம் 45284 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Follow our Instagram for more Latest Updates

SSC Constable (GD) காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு:
Force Male Female Total
Part-I
BSF 17650 3115 20765
CISF 4323 591 5914
CRPF 10589 580 11169
SSB 1924 243 2167
ITBP 1519 268 1787
AR 3153 0 3153
SSF 116 38 154
Part-II
NCB 174
Grand Total of Part-I and Part-II 45284
SSC Constable (GD) வேலைவாய்ப்பு விவரங்கள்:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-01-2000 க்கு முன்னதாகவும் 01-01-2005 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. இருப்பினும், உயர் வயதில் மூன்று (03) ஆண்டுகள் தளர்வு பெற்ற பிறகு, விண்ணப்பதாரர் 02-01-1997-க்கு முன்னதாக பிறந்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCB யில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1 ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரையும், மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3 ன் படி, ரூ. 21,700-69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://ssc.nic.in/ என்ற இணைய முகவரி மூலம் 30.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download SSC Notification 2022 Pdf

Download SSC Vacancy Increased Notice

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!