தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி தீவிரம் – இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை தீர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை களைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரே வாக்காளரின் பெயர் இருவேறு இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்க முடியும். அதன்படி தற்போது வாக்காளர் அட்டையுடன் ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைத்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக தலைநகரில் நாளை ‘இதற்காக’ போக்குவரத்து மாற்றம் – முக்கிய அறிவிப்பு!
அத்துடன் ஆதார் எண்ணை இணைக்க ‘6பி’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் அவ்வப்போது வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலர் ‘6பி’ படிவத்தை வழங்கி வருகின்றனர். இந்த படிவத்தை பெற்று அனைவரும் தங்களின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணியை விரைவாக முடித்திட வேண்டுமென அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணியை விரைவாக முடிப்பதற்கு பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் ஒவ்வொரு வீடு வீடாக வந்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த வாய்ப்பை மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்