தமிழக தலைநகரில் நாளை ‘இதற்காக’ போக்குவரத்து மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக தலைநகரில் நாளை 'இதற்காக' போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு!
தமிழக தலைநகரில் நாளை 'இதற்காக' போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு!
தமிழக தலைநகரில் நாளை ‘இதற்காக’ போக்குவரத்து மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வரும் 27ம் தேதி ஆண்டு பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. தற்போது திருப்பதியில் கோலகலமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற உள்ளது.

திருப்பதி திருக்குடை:

திருப்பதியில் வரும் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த கொடியேற்றத்தை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி கருடசேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்நானம் என இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆந்திர மாநில முதல்வர் சுவாமிக்கு வஸ்திரங்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கபடவுள்ளார். அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் தமிழகத்தில் வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அரசு எடுத்துள்ள முயற்சி – பொதுமக்கள் வரவேற்பு!

அந்த வகையில் நடப்பு ஆண்டும் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள், சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமி சமர்ப்பணம் செய்யப்படவுள்ளது. இந்த திருப்பதி திருக்குடையானது நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதால், வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாளை சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி காலை 8 மணி முதல் டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை, அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

Exams Daily Mobile App Download

இந்த சாலைகளில் வழக்கமாக செல்லும் வாகனங்கள், ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலைகளில் சாலைகளுக்கு அனுமதி கிடையாது. இந்த பாலத்தில் செல்லும் வாகனங்கள் பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை,ராஜாஜி சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, புரசைவாக்கம் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல கூடாது என்று தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!