சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த தங்க விலை!
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வகையில், இன்று தங்க விலை அதிரடியாக குறைந்து உள்ளது. இதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை:
உலகம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த படியே இருந்து வருகிறது. அதாவது, நாட்டில் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைவதால் தான் தங்கத்தின் விலை திடீரென உயர்வதும் குறைவதுமாக உள்ளது. மேலும் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் பெண்கள் எதிர்காலத்தின் தேவைக்காக தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். தற்போதெல்லாம், வங்கிகளில் பணம் சேமிப்பதை காட்டிலும், ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதை தான் மக்கள் விரும்புகின்றனர். தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இரு மடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!
ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீரென அதிகரித்து சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838 க்கு விற்பனை ஆகிறது. இன்று தங்க விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களிடம் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.62.40-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.62,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்