WhatsApp பயனாளர்களுக்குக்கான புதிய வசதி – நிறுவனம் அறிவிப்பு!
உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இது அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் ஆப் நிறுவனம்:
வாட்ஸ் ஆப் என்பது ஸ்மார்ட் போன்களில் உள்ள ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும். இந்த செயலி 2009ம் ஆண்டு பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இச்செயலின் மூலம் நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியின் மூலம் உரை செய்திகள் மட்டுமல்ல படம், நிகழ்ப்பாடம், ஒளிப்பதிவுகள் போன்றவற்றை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். தற்போது இந்த வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் நடத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
நாட்டில் இணையத்தின் சேவை தற்போது அனைத்து வகையான வேலைகளுக்கும் பயன்படுகிறது. அதாவது வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பரிமாற, பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான செய்திகளை பெற்றோர்களிடம் தெரிவிக்க போன்ற பல்வேறு நல்ல பயன்பாடுகளுக்குக்கு அவசியமானதாக உள்ளது. தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை வழங்கியுள்ளது. மேலும், இந்த வசதியை எவ்வாறு செயல்படுத்துவது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ரயிலை மிஸ் பண்ணிட்டா இனி எந்த கவலையும் இல்லை – IRCTCயின் புதிய அம்சம்!
பொதுவாக நம் ஒரு நபரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ பேசுவதற்கு அதிக முக்கியத்துவம் தருவது வழக்கம். அந்த வகையில் அந்த குறிப்பிட்ட நபர், அல்லது குழுவினரிடம் இருந்து வரும் மெசேஜ் க்கு முக்கியத்துவம் தரும் வகையில் அதனை நீங்கள் வாட்ஸ் ஆப் ல் பின் டு டாப் செய்து வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட நபர் அல்லது குழுவிடம் இருந்து வரும் மெசேஜ் ஐ நீங்கள் தவற விடாமல் வைத்து கொள்ளலாம். வாட்ஸ் ஆப் ல் பின் செய்ய நினைக்கும் நபரின் கணக்கை அழுத்தி பிடித்தால் வாட்ஸ் ஆப் ன் மேலே ஒரு பின் சிம்பிள் தோன்றும் அதனை கிளிக் செய்யும் போது இந்த புதிய வசதியின் மூலம் அந்த குறிப்பிட்ட 3 கன்வர்சேஷனை மட்டுமே பின் செய்து கொள்ள முடியும் என வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்