ரயிலை மிஸ் பண்ணிட்டா இனி எந்த கவலையும் இல்லை – IRCTCயின் புதிய அம்சம்!

4
ரயிலை மிஸ் பண்ணிட்டா இனி எந்த கவலையும் இல்லை - IRCTCயின் புதிய அம்சம்!
ரயிலை மிஸ் பண்ணிட்டா இனி எந்த கவலையும் இல்லை - IRCTCயின் புதிய அம்சம்!
ரயிலை மிஸ் பண்ணிட்டா இனி எந்த கவலையும் இல்லை – IRCTCயின் புதிய அம்சம்!

நீங்கள் ரயில் பயணம் செய்வதில் அதிகம் விருப்பம் கொண்டவரா? அப்போ இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சம் உங்களுக்கு மிகுந்த பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

IRCTC ரயில் பயணிகள்:

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிகளவு விரும்பி பயணிப்பர். குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிப்பார்கள். ஏனெனில் டிக்கெட் கட்டணம் ரயில்களில் தான் குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதற்காகவே மக்கள் அதிகளவு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி இருக்கையில் ரயில் பயணிகளுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

அது என்னவென்றால், இப்போது நீங்கள் பதிவு செய்திருந்த ரயில் நிலையத்திற்குப் பதிலாக வேறு எந்த நிலையத்திலிருந்தும் ரயிலை பிடிக்கலாம். இதற்காக ரயில்வே உங்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்காது. அதாவது சில நேரங்களில் பயணிகள் ஏறும் இடத்திலிருந்து போர்டிங் ஸ்டேஷன் வெகு தொலைவில் இருப்பதால், ரயிலை தவறி விடும் சூழ்நிலை ஏற்படும். அப்போது திடீரென போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்படுவார்கள். அந்த சமயம் IRCTC நிர்வாகம் அறிமுகபடுத்தியுள்ள இந்த சேவையை மனதிற்குள் நினைவு கொண்டு ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஜூலை 31 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இப்படி பயணிகள் தங்களது போர்டிங் ஸ்டேஷனை மாற்றியவுடன், முன்னர் பதிவு செய்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலைப் பிடிக்க முடியாது என்பதையும், ஒருமுறை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மற்ற முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், பயணிகள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறொரு நிலையத்திலிருந்து ரயிலை பிடித்தால், அவர் அபராதம் மற்றும் போர்டிங் பாயிண்ட் மற்றும் திருத்தப்பட்ட போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த வசதி ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

போர்டிங் ஸ்டேஷனை மாற்ற எளிமையான வழிமுறை :

 • முதலில் நீங்கள் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் https://www.irctc.co.in/nget/train-search
 • உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, ‘புக்கிங் டிக்கெட் வரலாறு’ என்பதற்குச் செல்லவும்.
 • உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்து, ‘போர்டிங் பாயிண்டை மாற்று’ என்பதற்குச் செல்லவும்.
 • ஒரு புதிய பக்கம் திறக்கும், கீழ்தோன்றும் இடத்தில் அந்த ரயிலுக்கான புதிய போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
 • புதிய நிலையத்தை தேர்ந்தெடுத்த பிறகு, கணினி உறுதிப்படுத்தல் கேட்கும். இப்போது நீங்கள் ‘சரி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
 • போர்டிங் ஸ்டேஷனை மாற்ற உங்கள் மொபைலில் ஒரு எஸ்எம்எஸ் வரும். அதை உள்ளிட்டு உறுதி செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

 1. இது ஒரு புதிய அம்சமா?போர்டிங் ஸ்டேஷன் மாற்ற 24 மணநேரத்துக்கு முன் பதிவிட வேணாலும் என்பது ஏற்கனவே உள்ளது.ஆனால் ரயிலை ஏன் வேண்டிய நிலையத்தில் தவறு. விட்டால் டாக்ஸியில் சென்று வேறு நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி பயணம் செய்யலாமா என்பதற்கு விவரம் ஏதும் இல்லை.சும்மா அடிச்சு விட்டாங்க.காசா பணமா?

  .

  • இது ஒரு புதிய அம்சமா?போர்டிங் ஸ்டேஷன் மாற்ற 24 மணிநேரத்துக்கு முன் பதிவிட வேண்டும் என்பது ஏற்கனவே உள்ளது.ஆனால் ரயிலை ஏற வேண்டிய நிலையத்தில் தவற விட்டால் டாக்ஸியில் சென்று வேறு நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி பயணம் செய்யலாமா என்பதற்கு விவரம் ஏதும் இல்லை.சும்மா அடிச்சு விட்டாங்க.காசா பணமா?

   .

 2. One day before journey Boarding station alterations are too much time in our Digital India.It s have to be reduced to 4 hours before departure of train at boarding station.

 3. One day before journey Boarding station alterations are too much time in our Digital India.It has to be reduced to 4 hours before departure of train at boarding station.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!