சென்னை பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.50,000/-
சென்னை பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Managing Director (MD) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் Managing Director (MD) பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Of Science / MBA / PhD முடித்திருப்பது அவசியமாகும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட திட்டங்கள் அல்லது ஆராய்ச்சிகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Incubation / Startup Activities களில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 45 வயதுக்கு மிகத்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.