விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை காவ்யாவின் புதிய அவதாரம் – ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது மீண்டும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரத் துவங்கி இருக்கிறது. அதாவது முல்லையின் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சைக்காக குடும்பத்தினர்கள் 5 லட்சம் வரைக்கும் செலவு செய்ததை மீனா தற்போது வரைக்கும் வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். எப்படியாவது அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன் என கதிரும் கோபத்தில் சொல்லிவிட்டு முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
மீனாவால் தான் இந்த குடும்பம் இரண்டாகி விட்டது என மீனாவின் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொலைவெறியில் இருக்கின்றனர். இந்நிலையில், கதிரையும் முல்லையையும் சமாதானப்படுத்தி குடும்பத்தினர்கள் வீட்டிற்கு அழைத்து வருவார்களா எனவும், முல்லைக்கு குழந்தை பிறக்குமா எனவும் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான் முன்னிலையில் இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்து வரும் தனம், முல்லை, மீனா, மூர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் என அனைவருமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் அளவுக்கு இவர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காவ்யா அவ்வப்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். தற்போது காவ்யா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் படியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.