தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!

கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பாதிப்பால் நாட்டில் பல மாற்றங்கள் அமைந்ததில் பாதிப்படைந்தது கல்வியும் தான். அதனால் மக்கள் நலனுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தியது. அதில் ஒன்றாகிய பள்ளி கட்டணம் குறித்து தனியார் பள்ளி நிறுவனம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

தனியார் பள்ளி நிறுவனம்:

கொரோனா காலகட்டமாகிய 2020 மற்றும் 2021 ல் பல மாற்றங்கள் நடந்தது. ஏனென்றல் வைரஸ் தொற்றால் பல கோடி மக்கள் பலியானார்கள். இதனால் அரசும் நாட்டில் மக்களின் நன்மைக்காக பல புது மாற்றங்களை அமலுக்கு கொண்டு வந்தது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் பள்ளிகள், அலுவலகங்கள் என ஏதும் செயல்படாமல் பொருளாதார ரீதியாக மக்கள் அநேகர் அவதி பட்டனர். இந்த நிலையை மாற்ற நினைத்து அரசு மக்களுக்காக நிதியுதவி, சலுகைகள் என பல அம்சங்களை செய்து ஓரளவு வறுமையில் இருந்து மீட்டு வந்தது.

மாநில அமைப்பு சாரா ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் ஊதிய உயர்வு!

அதில் ஒன்றாகிய கல்வியிலும் புதிய திட்டங்களை தற்சமயத்துக்காக மாற்றியது. அதாவது வீட்டில் உள்ள வறுமையால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மாணவர்களுக்காக கல்வி கட்டணம் தனியார் பள்ளிகளில் 100% வசூலிக்க கூடாது எனவும், ஒவ்வொரு பள்ளியிலும் 75% கல்வி கட்டணம் மட்டும் வசூலிக்க பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதன் படி கடந்த ஆண்டும் கல்வி கட்டணம் வசூலித்து பள்ளிகள் செயல்பட்டது. இந்த ஆண்டு தொற்றின் பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் எல்லாம் திறக்கப்பட்டு பழைய நிலைக்கு மாறி வருகிறது.

மேலும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எப்போதும் போல தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. தற்போது வருகிற ஜூன் 13 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி நிறுவனங்கள் அரசுக்கு கல்வி கட்டணம் குறித்து கோரிக்கை வைத்துள்ளது. அதாவது தனியார் பள்ளி உரிமையாளர்கள், ’75 சதவீத கட்டணம் வசூலிப்பது, பள்ளி நடத்தப் போதுமானதாக இல்லை. எனவே, 100 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அனுமதித்தால், சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும் எனவும் இது குறித்த கட்டண விவரப் பட்டியலை, தேர்வுத் தாள் திருத்தப் பணி முடிந்ததும், அரசிடம் சமர்ப்பிக்க அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இவ்வாறு புதிய கல்வி ஆண்டில் எத்தனை சதவீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!