வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கான விடுமுறையை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.
வங்கி விடுமுறை:
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்தும், பண்டிகைகளை பொறுத்தும் மாறுபடுகிறது.
Exams Daily Mobile App Download
இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, குடியரசு தின விடுமுறை போன்ற விடுமுறைகள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும். அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் அவசிய ஒன்றாக உள்ளதால் நாம் வங்கி விடுமுறையை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். தற்போது வரப்போகும், ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த ஜூன் மாதத்தில் பண்டிகை மற்றும் அரசு விடுமுறைகள் நாட்கள் ஏதும் இடம்பெறவில்லை.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகுதியில்லாதோர் அட்டைகள் பறிமுதல்! அரசின் முக்கிய உத்தரவு!
விடுமுறை நாட்கள்:
5.06.2022 – ஞாயிறு விடுமுறை
11.06.2022 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
12.06.2022 – ஞாயிறு விடுமுறை
19.06.2022 – ஞாயிறு விடுமுறை
25.06.2022 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை
26.06.2022 – ஞாயிறு விடுமுறை