ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகுதியில்லாதோர் அட்டைகள் பறிமுதல்! அரசின் முக்கிய உத்தரவு!

0
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தகுதியில்லாதோர் அட்டைகள் பறிமுதல்! அரசின் முக்கிய உத்தரவு!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தகுதியில்லாதோர் அட்டைகள் பறிமுதல்! அரசின் முக்கிய உத்தரவு!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகுதியில்லாதோர் அட்டைகள் பறிமுதல்! அரசின் முக்கிய உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட பொருட்கள் மாதந்தோறும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை போன்றவை வழங்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் விளக்கம்!

இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். இதன் திட்டத்தின் கீழ் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றும் வருகின்றனர். இந்த நிலையில் தகுதி இல்லாத பல லட்சம் பேர் ரேஷன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மத்திய உணவு வழங்கல் துறை மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது உத்திரபிரதேச மாநில அரசு தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டை உடனடியாக சரண்டர் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் 100 சதுர அடிக்கு மேல் வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள் , ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் போன்றோர் ரேஷன் கார்டு பயன்படுத்த தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படைக்காமல் இருந்தால் அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!