ரூ.56,100/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம் (NEIGRIHMS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Junior Resident Doctors பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் Junior Resident Doctors பணிக்கு என்று 40 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் MBBS பட்ட பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 30 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
- தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பணியின் போது Level 10 of pay Matrix என்கிற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF