விஜய் டிவி பிரபல தொகுப்பாளரான ரக்ஷன் ஒரு நிகழ்ச்சிக்காக பெறும் சம்பளம் – இணையத்தில் லீக்கான தகவல்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரக்ஷன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறித்தான தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரக்ஷன் சம்பளம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்கிற நிகழ்ச்சியை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு மக்களின் மனதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி இடம் பிடித்திருந்தது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து எக்கச்சக்கமான ரசிகர்களின் கூட்டங்களை சம்பாதித்தவர் தான் ரக்சன்.
ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்தும் பாக்கியா – மகிழ்ச்சியில் எழில்! ப்ரோமோ ரிலீஸ்!
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு KPY சாம்பியன்ஸ், KPY 6 7 ஆகிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இதன்பின்பு சின்னத்திரையிலும் கூட ரக்ஷனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது . சின்னத்திரை வாய்ப்புகளுக்கு பிறகு பெரிய பெரிய திரைப்பட வாய்ப்புகளும் ரக்சனுக்கு வந்து குவிய ஆரம்பித்தன. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு நண்பனாக நடித்து இருப்பார். இதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். குக் வித் கோமாளி இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனிலும் இவர்தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நடைபெற்றது. அதிலும் சிறந்த தொகுப்பாளர் விருதை ரக்சன் நான் பெற்றிருந்தார். தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரக்சன் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது லீக் ஆகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்க ரக்சன் ஒரு லட்சம் வரைக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.