தமிழகத்தில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகள்!
நகையை அடகு வைத்து நகைக்கடன் மூலமாக தான் பலரும் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், எந்தெந்த வங்கிகளில் குறைவான வட்டியுடன் அதிகமான பணம் வழங்கப்படுகிறது என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன்:
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்து கொண்டே சென்றாலும் நகை பிரியர்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நகை அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை, கடன் என்றாலும் அந்த நகையை வைத்து தான் பணம் வாங்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் அவசியமான நேரங்களில் உதவும் என்பதால் தான் மக்கள் அதிகமாக நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தற்போது எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதற்கான முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 13.50% முதல் 16.95% வரை வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ. 25,001 முதல் ரூ.25 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. HDFC வங்கியில் 11% முதல் 16% வரை வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ.10,000 முதல் கடன்தொகை வழங்கப்படுகிறது. கனரா வங்கியில் 7.35% முதல் வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.35 லட்சம் வரை கடன்தொகை வழங்கப்படுகிறது.
முத்தூட் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் 12% முதல் 26% வரை வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ.1,500 முதல் கடன்தொகை வழங்கப்படுகிறது. SBI கோல்டு லோன் முறையில் 7.00% முதல் வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.50 லட்சம் வரை கடன்தொகை வழங்கப்படுகிறது. கோடக் மஹிந்திரா வங்கியில் 13.50% முதல்10.00% முதல் 17.00% வரை வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 கோடி கடன்தொகை வழங்கப்படுகிறது. இந்தஸ் இந்த் வங்கியில் 11.50% முதல் 16.00% வரை வட்டி வழங்கப்படுகிறது மற்றும் அந்த நகைகளுக்கு ரூ.10 லட்சம் முதல் கடன்தொகை வழங்கப்படுகிறது.