தமிழக சுகாதார துறையில் காத்திருக்கும் அரசு வேலை – ரூ.40,000/- வரை ஊதியம்!
Lab Attendant, Lab Technician, Cleaner, Driver மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப தமிழக சுகாதார துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக சுகாதார துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பொது சுகாதார துறையில் தற்போது காலியாக உள்ள Multipurpose Hospital Worker பணிக்கு 2 இடமும், Lab Attendant, Lab Technician, Microbiologist, Auxiliary Nurse Midwives, Psychologist, Cleaner, Driver, Dental Assistant, Pharmacist, Refrigeration Mechanic ஆகிய பணிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு, ITI, DMLT, Diploma, Graduation, MBBS, Post Graduation, MD, M.Sc படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
- Microbiologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 ஆண்டுகள் Lab-யில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். Refrigeration Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறையில் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- Dental Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Dental Hygiene துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். Psychologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 வருடம் counselling services துறையில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவார்கள். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002 என்ற முகவரிக்கு 13.4.2022 க்குள் இருக்க வேண்டும்.