BEL சென்னை நிறுவனத்தில் ரூ.11,110/- உதவித்தொகையில் வேலை – 73 காலிப்பணியிடங்கள்!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், சென்னையில் Graduate Apprentice & Technician (Diploma) Apprentices ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு 73 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Graduate Apprentice கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Technician (Diploma) Apprentice கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கான வயது வரம்பானது பயிற்சி விதிகளின்படி பின்பற்றப்படும்.
BEL Apprentice உதவித்தொகை:
- Graduate Apprentice – ரூ.11110/-
- Technician (Diploma) Apprentice – ரூ.10400/-
BEL சென்னை பயிற்சி காலம்:
அப்ரண்டிஸ்ஷிப் (திருத்தம்) சட்டம் 1973ன் படி ஒரு வருட காலத்திற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
BEL Apprentice பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.11.2021 வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.