Android, iOS பயனர்களின் கவனத்திற்கு – நவ.1 முதல் WhatsApp செயல்படாது?

0
Android, iOS பயனர்களின் கவனத்திற்கு - நவ.1 முதல் WhatsApp செயல்படாது?
Android, iOS பயனர்களின் கவனத்திற்கு - நவ.1 முதல் WhatsApp செயல்படாது?
Android, iOS பயனர்களின் கவனத்திற்கு – நவ.1 முதல் WhatsApp செயல்படாது?

வாட்ஸ்அப் சேவையானது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பழைய ஆண்ட்ராய்டு, iOS மொபைல் போன்களில் சேவை நிறுத்தப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை:

வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவையாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்-ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!

புதிய அறிவிப்பின் படி, நவம்பர் 1 முதல் ஆண்ட்ராய்டு 4.1-க்கு முன் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது. ஆப்பிள் வாட்ஸ்அப் iOS 10 மற்றும் இயங்குதளத்தின் புதிய பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில் மட்டுமே வாட்ஸ்அப் இயங்கும். மேலும் KaiOS 2.5.0-ஐ மட்டுமே ஆதரிக்கும். எனவே, ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனர்கள் தொடர்ந்து இதனை பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் செயலியின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்த தேவையான முன்னெச்சரிக்கையாக இந்த செயல்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Jio நிறுவனம் வழங்கும் சூப்பர் தீபாவளி ஆபர் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 1-க்குப் பிறகு குறிப்பிட்ட இயங்குதளத்தின் பயனர்களின் கணக்கு தானாக வெளியேற்றப்படும். மேலும் புதிய ஸ்மார்ட்போன் இயங்குதளத்திலிருந்து பழைய கணக்கை தொடங்கும் போது உங்களின் பழைய சாட்கள் கிடைக்காது. உங்கள் மொபைலின் ஆண்ட்ராய்டு/ iOS பதிப்பை சரிபார்க்க, ஆண்ட்ராய்டு போனில் உள்ள செட்டிங்ஸ் பக்கத்தில் உள்ள துணை பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். அதில், ‘ஆண்ட்ராய்டு பதிப்பு’ தேர்வில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதேபோல், iOS-ல் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் பொது / அறிமுகம் / மென்பொருள் பதிப்பு என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!