OLA E – Scooter விற்பனை தள்ளிவைப்பு – செப்.15 முதல் தொடங்கும்! முழு விபரம் இதோ!
ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி முதல் ஆன்லைன் விற்பனை தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது அது செப்.15ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்:
அன்றாட வாழ்வில் அனைவரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வாகனங்கள் மாறிவிட்டது. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் விலை வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது. இதனால் பலரது கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் போது, விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருவதாக ஓலா நிறுவனம் கடந்த ஆண்டில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு!
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி இந்த வகை பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மக்களிடையே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த ஆர்வம் அதிகமாகி வருகிறது. நேரில் சென்று வாங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் ஆன்லைன் மூலம் புக் செய்து வருகின்றனர். ஓலாவின் எலக்ட்ரிக் வண்டியின் விலையானது 99,999 ரூபாய் என்றும், S1 மாடல் வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – தினசரி 3GB டேட்டா!
மேலும் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளில் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் புக் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் அல்லது ஓலா உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் மூலம் தவணையில் வாங்கலாம் என கூறப்படுகிறது. செப்டம்பர் 8ம் தேதி முதல் ஆன்லைன் விற்பனை தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 15 முதல் விற்பனை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.