Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு!

0
Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு - புதிய விலை பட்டியல் வெளியீடு!
Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு - புதிய விலை பட்டியல் வெளியீடு!
Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு!

இந்தியாவின் இருசக்கர வாகனங்களின் முன்னோடியாக திகழும் ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் சமீபத்திய வரவான கிளாசிக் 350 வாகனங்களின் விலை தற்போது ரூ.6,431 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பையர்பால், சூப்பர்நோவா, ஸ்டெல்லர் போன்ற வாகனங்களும் விலை உயர்வை கண்டுள்ளது.

விலை உயர்வு

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டு பலரும் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில் வாகன உற்பத்தியாளர்களும் வாகனங்களின் விலையை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான TVS நிறுவனமும் வாகனங்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. தற்போது ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. வாகன உற்பத்தியில் பழமையான அனுபவங்களை புதிய யுக்தியை புகுத்தி வரும், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வாகனங்கள் தற்போது வாடிக்கையாளர்களை பெரிதளவு கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான கிளாசிக் 350 மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – தினசரி 3GB டேட்டா!

இந்நிலையில் ராயல் என்பீல்ட் 350 இன் விலையை ரூ.6,431 என்ற அடிப்படையில் அதிகரிப்பதாகவும், க்ரூஸர் மாடல் இப்போது ரூ.1,98,537 முதல் ரூ .2,16,351 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ராயல் என்ஃபீல்ட் Meteor 350 மாடல்கள் பயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. அந்த வகையில் தற்போது விலை உயர்த்தப்பட்ட இவ்வகை வாகனங்களின் விலை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

ராயல் என்பீல்ட் Meteor 350 ஃபயர்பால்:
  • பயர்பால் ரெட் – ரூ.1,98,537 லிருந்து ரூ.6,428 ஆக அதிகரித்துள்ளது.
  • பயர்பால் மஞ்சள் – ரூ.1,98,537 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • பயர்பால் பிளாக் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • பயர்பால் கிரே கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • பயர்பால் ஒயிட் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • பயர்பால் கிரீன் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • பயர்பால் பிரவுன் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
ராயல் என்பீல்ட் Meteor 350 ஸ்டெல்லர்:
  • ஸ்டெல்லர் நீலம் – ரூ.2,04,527 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • ஸ்டெல்லர் சிவப்பு – ரூ.2,04,527 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.
  • ஸ்டெல்லர் பிளாக் – ரூ.2,04,527 – ரூ.6,428 அதிகரிப்பு.
  • ஸ்டெல்லர் தூய கருப்பு – ரூ.2,06,364 லிருந்து ரூ.6,429 அதிகரிப்பு.
ராயல் என்பீல்ட் Meteor 350 சூப்பர்நோவா:
  • சூப்பர்நோவா பிரவுன் – ரூ.2,14,513 லிருந்து ரூ.6,429 அதிகரிப்பு.
  • சூப்பர்நோவா ப்ளூ – ரூ.2,14,513 லிருந்து ரூ .6,429 அதிகரிப்பு.
  • சூப்பர்நோவா சில்வர் கஸ்டம் – ரூ.2,16,351 லிருந்து ரூ.6,431 அதிகரிப்பு.
  • சூப்பர்நோவா பீஜ் கஸ்டம் – ரூ.2,16,351 லிருந்து ரூ.6,431 அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!