IPL 2021 : RCB அணியுடன் இணைய அமீரகத்திற்கு பறந்த ஏபி டிவில்லியர்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2021 RCB அணியுடன் இணைய அமீரகத்திற்கு பறந்த ஏபி டிவில்லியர்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

IPL 2021 : RCB அணியுடன் இணைய அமீரகத்திற்கு பறந்த ஏபி டிவில்லியர்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

IPL போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஏபி டிவில்லியர்ஸ் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் 2021:

இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். எப்பொழுதும் இந்த T20 போட்டி தொடரை ரசிகர்கள் கொண்டாடி வருவர். கடந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்று பரவியதன் காரணத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. ரசிகர்கள் இன்றியே இந்த தொடர் முழுவதும் நடத்தப்பட்டது.

IND vs ENG 4வது டெஸ்ட் – இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட் இழப்பு! தாக்குர் அசத்தல்!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அவற்றின் எஞ்சிய போட்டிகள் கடந்த ஆண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் யாவும் வரும் செப்.19 தேதி முதல் மீண்டும் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை 2021 : பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 

இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து அணி வீரர்களும் அமீரகத்திற்கு சென்றுள்ளனர். அவ்வரிசையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அமீரகத்திற்கு சென்றுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிரடி மன்னனாக திகழ்பவர் ஏபி டிவில்லியர்ஸ். இதுவரை 40 அரைசதங்கள் மற்றும் 3 சத்ததுடன் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இவர் அணியுடன் இணைந்திருப்பது பெங்களூர் அணிக்கு பலம் சேர்த்துள்ளது. மேலும் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!