டி20 உலகக்கோப்பை 2021 : பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 

0
டி20 உலகக்கோப்பை 2021 பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 
டி20 உலகக்கோப்பை 2021 பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 

டி20 உலகக்கோப்பை 2021 : பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது உலகக்கோப்பை தொடர். அதிலும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் ஏற்படும். கடந்த 2020ம் ஆண்டில் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் அப்போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் அக்டோபர் 24-ம் தேதி துபாயில் கோதாவில் இறங்குகின்றன. தற்போது அதற்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ENG vs IND 4வது டெஸ்ட் – நடுவர் முடிவை ஏற்க மறுத்த கேஎல் ராகுல்! அபராதம் விதிப்பு!

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயலாற்றிய ஆஷிப் அலி, குஷ்தில் ஷா போன்ற பேட்ஸ்மேன்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் கலந்த கலவையாக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இந்திய அணியை தோற்கடிப்பதாக சவால் விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகக் கோப்பைக்கான அணி விவரம்:

பாபர் ஆஸம் (கேப்டன்), ஆஷிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், ஷோயிப் மசூத் (பேட்ஸ்மேன்கள்), ஆஸம் கான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்கள்), இமாத் வாசிம், முகமது நவாஸ், முகமது வாசிம், சதாப் கான் (ஆல்ரவுண்டர்கள்), ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், ஷாஹின் ஷாஅப்ரி (வேகப்பந்துவீச்சாளர்கள்)

ரிசர்வ் வீரர்கள்: பக்கர் ஜமான், ஷாநவாஸ் தனானி, உஸ்மான் காதிர்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!