IND vs ENG 4வது டெஸ்ட் – பவுலர்கள் அசத்தல்! வெற்றியை நோக்கி இந்தியா!!

0
IND vs ENG 4வது டெஸ்ட் - பவுலர்கள் அசத்தல்! வெற்றியை நோக்கி இந்தியா!!
IND vs ENG 4வது டெஸ்ட் - பவுலர்கள் அசத்தல்! வெற்றியை நோக்கி இந்தியா!!
IND vs ENG 4வது டெஸ்ட் – பவுலர்கள் அசத்தல்! வெற்றியை நோக்கி இந்தியா!!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது.

IND vs ENG 4வது டெஸ்ட்:

ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

டி20 உலகக்கோப்பை 2021 : பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 

முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்திய அணி பெரிய ஸ்கோரினை நோக்கி செல்ல முடியாமல் தத்தளித்தது. கோஹ்லி (50) & தாக்குர் (57) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 191 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்க்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி ஒல்லி போப் (81) பெர்ஸ்டோ (37), மொயீன் (35), கிறிஸ் வோக்ஸ் (50) ஆகியோரின் உதவியுடன் 290 ரன்களை குவித்தது. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடியதால் இமாலய ஸ்கோரினை நோக்கி பயணித்தது. இந்திய அணி ரோஹித் (127), ராகுல் (46), புஜாரா (61), கோஹ்லி (44), பண்ட (50), தாக்குர் (60), உமேஷ் (25), பும்ராஹ் (24) ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் 148.2 ஓவர்களின் முடிவில் 466 ரன்கள் குவித்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் 367 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து துவக்கியது. நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்து இருந்தது. ரோரி பர்ன்ஸ் 31 ரன்களுடனும், ஹசீப் ஹமீது 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்னும் வெற்றி பெற 290 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடைசி நாள் மேட்ச் அப்டேட்ஸ் :
  • தாக்குர் வேகத்தில் ரோரி பர்ன்ஸ் பண்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 41 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியுள்ளது. களத்தில் ஹசீப் ஹமீது 50 ரன்களுடனும் , மலான் ரன்கள் இன்றியும் உள்ளனர். இன்னும் இங்கிலாந்து வெற்றி பெற 265 ரன்கள் தேவைப்படுகிறது.
  • ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டிய தருணத்தில் டேவிட் மலான் ரன் அவுட் ஆகி வெளியேறினார். டேவிட் மலான் (5 ரன்கள், 33 பந்துகள்) வெளியேற்றத்திற்கு பிறகு கேப்டன் ஜோ ரூட் களத்தில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து அணி தற்போது 58.1 வர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை குவித்து உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்க இன்னும் வெற்றி பெற 237 ரன்கள் தேவைபடுகிறது. தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
  • உணவு இடைவேளை முடிந்த சமயத்தில் ஹசீப் ஹமீது 63 ரன்களில் (193 பந்துகள், 6 பவுண்டரி) ஜடேஜா பந்து வீச்சில் போல்டாகினார். தற்போது ஒல்லி போப் களமிறங்கியுள்ளார். இங்கிலாந்து அணி 63.2 ஓவர்களில் 144-3 என்ற நிலையை அடைந்துள்ளது. இன்னும் 223 ரன்கள் வெற்றி பெற தேவையாக உள்ளது.
  • விக்கெட்டுகளை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி நிலையில் இந்திய பவுலர்கள் அசத்தி வருகின்றனர். பும்ராஹ் வேகத்தில் ஒல்லி போப் (2) வீழ்ந்தார். இன்னும் 56.5 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற 226 ரன்கள் தேவைபடுவதால் தற்போது நெருக்கடி உண்டாகியுள்ளது.
  • அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்புகின்றனர். ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி ரன்கள் ஏதும் இன்றி வெளியேறினர். இங்கிலாடு அணி 72.4 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 49.1 ஒவர்களில் 218 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியால் இந்திய னையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!