மத்திய அரசு துறைகளில் 9 லட்சம் காலியிடங்கள் – கடும் அதிருப்தி!

0
மத்திய அரசு துறைகளில் 9 லட்சம் காலியிடங்கள் - கடும் அதிருப்தி!
மத்திய அரசு துறைகளில் 9 லட்சம் காலியிடங்கள் – கடும் அதிருப்தி!

மத்திய அரசின் துறைகளில் மொத்தம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான காலிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக புள்ளி விவரங்களின் படியான தகவல்கள் தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு:

நாட்டில் வேலை வாய்ப்பின்றி தவித்து வரும் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வெளியான வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களின் படி மத்திய அரசின் துறைகளில் மொத்தம் 25 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே துறையில் மூன்று லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதேபோல் வருவாய் துறையில் 70,000 பணியிடங்களும், அஞ்சல் துறையில் சுமார் ஒரு லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளது. நாட்டின் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்துவரும் நிலையில் மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியம் காட்டி வருவதாக பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் மத்திய அரசு உடனடியாக பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

TN TET தேர்வின் PREVIOUS QUESTION PAPER – முக்கிய விவரங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!