ரூ.78,500 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.78,500 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு - 500 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.78,500 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு - 500 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.78,500 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

மகாராஷ்டிர வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி, இந்தியா முழுவதும் 15 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கி சார்பில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 500 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer MMGS Scale-II பணியில் 400 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்தெடுக்கப்படும் தகுதியானவருக்கு சம்பளம் மாதம் ரூ.48,170 முதல் 69,810 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதார்கள் ஏதாவதொரு துறையில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஏதாவதொரு வணிக வங்கியில் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!

இந்த வகையில் Generalist Officer MMGS Scale-III பணியில் 100 காலியிடங்கள் உள்ளது. தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ.63,840 – 78,230 வரை அளிக்கப்படும். ஏதாவதொரு துறையில் 60 % மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து ஏதாவதொரு வணிக வங்கியில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு ஐபிபிஎஸ் ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள், சீருடை கட்டாயமில்லை – மாநில அரசு முடிவு!

இந்த பணியிடங்களுக்கு தேர்வு மையம் சென்னை ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 இருப்பினும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும் மற்றும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 22 ஆகும். ஆன்லைன் தேர்வு மார்ச் 12ம் தேதி நடைபெறும். இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!