Capgemini நிறுவனத்தில் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
Capgemini நிறுவனத்தில் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
Capgemini நிறுவனத்தில் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
Capgemini நிறுவனத்தில் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் தற்போதைய கொரோனா தொற்றுநோய் நிலைமை மேம்பட்டு வருவதால், TCS, விப்ரோ ஆகிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து Capgemini (IT) நிறுவனத்தில் சுமார் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

இந்தியாவில் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் பல தொழில்துறை நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவங்களான TCS மற்றும் விப்ரோவுக்கு பிறகு, இப்போது பிரெஞ்சு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான கேப்ஜெமினி இந்த ஆண்டு நாட்டில் 65,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது.

சவரனுக்கு ரூ.136 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

அந்த வகையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் முன்னணி IT நிறுவனமான கேப்ஜெமினி இந்தியாவில் 13 இடங்களில் இயங்கி வருகிறது. இப்போது இந்நிறுவனங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அடிப்படையில் ‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நிலையான மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுவது எங்கள் நோக்கமாகும். கேப்ஜெமினியில் சேரும்போது, நீங்கள் ஒரு சுதந்திர சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் அடங்கிய பல்வேறு உலகளாவிய குழுவின் ஒரு பகுதியாக மாறுவீர்கள்.

உலகின் முன்னணி வணிகங்களை மாற்றுவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். அதே நேரத்தில் சிறந்த தொழில்களை உருவாக்கி, உலகிற்கு தேவையான புதுமைகளை வழங்குகிறோம்’ என்று இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பர பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தி இன்டீப் ரிப்போர்ட் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான தேவை 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!

அதே நேரத்தில் IT நிறுவனங்கள் முழு நேர பொறியாளர்களுக்கு 70 முதல் 120 சதவீதம் வரை உயர்வை வழங்குகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. சமீபத்தில், TCS தொழில்நுட்ப நிறுவனம் சிறிய இடைவெளிக்கு பிறகு, வேலை வாய்ப்புகளை தேடும் பெண் நிபுணர்களுக்கான மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்தது. இதேபோல், இன்போசிஸ், விப்ரோ மற்றும் பிற பெரிய IT நிறுவனங்களும் இந்தியா முழுவதும் பணியமர்த்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!