அரசு வேலைக்கு 54.25 லட்சம் பேர் பதிவு – முழு விவரங்களுடன்!

0

அரசு வேலைக்கு 54.25 லட்சம் பேர் பதிவு – முழு விவரங்களுடன்!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 54.25 லட்சம் ஆக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு:

அரசு வேலை என்பது பலரது கனவாகவே உள்ளது. பலர் அரசு தேர்வு எழுதி வேலை பெற முயற்சி செய்து வருகின்றனர். அதே போல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். தற்போது 54.25 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பரில் 64.13 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்திருந்த நிலையில் பிப்.29 நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 54.81 லட்சமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 21 & மே 1ல் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து கடந்த 31ம் தேதி நிலவரப்படி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையானது 54 லட்சத்து 25,114 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இவர்களில் 25 லட்சம் ஆண்கள், 29.24 லட்சம் பெண்கள், 285 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். பதிவு செய்தவர்களில் 10.84 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 23.92 லட்சம் பேர் 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லுாரி மாணவர்கள். மேலும் 17.03 லட்சம் பேர், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், 2.38 லட்சம் பேர் 45 முதல் 60 வயது வரை; 7,079 பேர் 60வயதுக்கு மேற்பட்டோர் எனது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!