ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி பிடித்தம்? மத்திய அரசு அறிவிப்பு!

1
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி பிடித்தம்? மத்திய அரசு அறிவிப்பு!
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி பிடித்தம்? மத்திய அரசு அறிவிப்பு!
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி பிடித்தம்? மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ரயில் போக்குவரத்தில் சமீப காலமாக பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டிக்கெட் ரத்து குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

டிக்கெட் ரத்து:

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் நீண்ட தூர பயணங்களுக்கு எப்போதும் விரும்புவது ரயில் போக்குவரத்தை தான். மிகவும் குறைந்த விலையில் ரயில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதும் இதற்கான காரணமாக உள்ளது. மேலும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏதுவாக படுக்கை மற்றும் இருக்கை வசதிகளையும் ரயில் பயணம் வழங்குகிறது. பயணிகள் இட நெருக்கடி ஏற்படுவதை தடுக்கு வகையில் டிக்கெட் முன்பதிவு வசதியும் உள்ளது.

முன்னதாக நேரடியாக மட்டுமே சென்று ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தற்போது வளர்ந்து விட்ட இணைய வசதியின் காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆன்லைன் வழியும் முக்கிய பங்காக உள்ளது. முன்னதாக, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்தால் அதற்கான கேன்சலேஷன் கட்டணம் வசூலிக்கப்படும். இது மிகவும் சிறிய அளவிலான கட்டணம் என்பதால் மக்களை பெரிதாக பாதிக்கவில்லை.

NEET தேர்வு முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மத்திய சுகாதாரத்துறை வெளியீடு!

ஆனால், தற்போது ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏசி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விட்டு, அவற்றை ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும், இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 200 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி, மூன்றாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 180 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி என சேர்த்து ரத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. This is nothing but a tax terrorism. Already GST in basic day to day commodities of ordinary citizens and peeling skins of theirs. If things go like this, recurrence of this government would be a distant dream.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!