தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 – திமுக அரசின் ஓராண்டு நிறைவு!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 - திமுக அரசின் ஓராண்டு நிறைவு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 - திமுக அரசின் ஓராண்டு நிறைவு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 – திமுக அரசின் ஓராண்டு நிறைவு!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. தமிழகம் நிதி நிலைமை நெருக்கடியில் இருந்த நிலையில் பதவியேற்ற ஸ்டாலின் முதன் முதலில் கையெழுத்திட்ட 5 கோப்புகளும் மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்த ஓராண்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஓராண்டு நிறைவு, செய்த சாதனைகள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி அமோக வெற்றியை தழுவியது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மேலும் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து தனது புதிய அமைச்சரவையை அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த வருடம் மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருடன் மேலும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இன்றுடன் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. கடந்த வருடம் திமுக ஆட்சியில் பொறுப்பேற்கும் போது கொரோனா 2வது அலை கோர தாண்டவம் ஆடி வந்தது.

TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுத்த திமுக அரசு, கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கி மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல்களை கண்காணித்து வந்தது. அரசின் கடுமையான நடவடிக்கையின் பேரில் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கின. சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து 4000 ரூபாய், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. கொரோனா கால நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் தரப்பட்டது. பொங்கல் பரிசாக 22 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனைகளை நிறைவேற்றியுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை ரூ.3 அதிரடியாக குறைக்கப்பட்டது. சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, பட்டியலின மக்களுக்கு சலுகைகள், இல்லம் தேடி கல்வி, மருத்துவம், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு, 5 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச பஸ் பயணம் என்று பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார்.

Exams Daily Mobile App Download

மேலும் அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தள்ளுபடி, 14 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதை தாண்டி, இப்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், மின்துறை சம்பந்தமான புகார்களை அளிக்க விண்ணகம் எனும் புதிய மின் நுகர்வோர் சேவை மையம் ஆகியவை தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!