TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!

0
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!

இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டிசிஎஸ் தனது அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு புதிய எம்பிஏ பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறைகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

IT வேலைவாய்ப்பு

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இந்த ஆண்டும் இது போன்ற நடவடிக்கைகளை தொடருவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ள TCS நிறுவனம் இப்போது 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த புதிய எம்பிஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

LPG சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – விலை கிடுகிடுவென உயர்வு!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் முதலில் ஆன்லைன் பதிவை முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு ஒரு சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணல்கள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இப்போது, இப்பதவிக்கான தகுதி மற்றும் விண்ணப்ப முறைகளை விரிவாக பார்க்கலாம்.

தகுதி:

2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் MBA பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறைகள்:
  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் TCS next step போர்ட்டலை திறக்க வேண்டும்.
  • அதில், TCS MBA பணியமர்த்தலுக்கு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • இப்போது விண்ணப்பதாரர்கள் TCS next step போர்ட்டலில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உள்நுழைந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதை சமர்ப்பித்ததும், ‘Apply For Drive’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download

  • இப்போது புதிய பயனர்களாக இருந்தால் Register Now என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • அந்த விருப்பத்தில், நீங்கள் ‘IT’ வகையைத் தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களை நிரப்ப தொடர வேண்டும்.
  • இப்போது விண்ணப்பதாரர்கள் தங்களின் படிவத்தைச் சமர்ப்பித்து, ‘Apply For Drive’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யலாம்.
  • அடுத்த கட்டத்தில், சோதனையின் பயன்முறையை ரிமோட்டாகத் தேர்ந்தெடுத்து, ‘விண்ணப்பிக்கவும்’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் விண்ணப்பத்தின் நிலையை உறுதிப்படுத்த, ‘உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்’ என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!