TNPSC வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – வைரலாகும் #Justiceformenin ஹேஷ்டேக்!

0
TNPSC வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு - வைரலாகும் #Justiceformenin ஹேஷ்டேக்!
TNPSC வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு - வைரலாகும் #Justiceformenin ஹேஷ்டேக்!
TNPSC வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – வைரலாகும் #Justiceformenin ஹேஷ்டேக்!

தமிழக அரசின் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆண் போட்டியாளர்களை ஆதரிக்கும் வகையில் #Justiceformenin என்ற பெயரில் ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது.

TNPSC வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பேரவையின் கூட்டத்தொடரில், அரசுத்துறைகளில் பாலின சமத்துவத்தை கொண்டு வர பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்த புதிய அறிவிப்புகள் சமூகத்தில் ஒரு முக்கிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது போக அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு அளிப்பதாக திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் – தகவல் வெளியீடு!

இந்த விவரங்களை கொண்டு கணக்கிடுகையில், தமிழக அரசுத் துறைகளில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் முக ஸ்டாலினுக்கு ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ‘தமிழ்நாட்டில், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பெண்கள் அரசு வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

TNPSC, தவறான கிடைமட்ட மற்றும் செங்குத்து இடஒதுக்கீடு முறையை பின்பற்றுகிறது. இதனால் அரசு வேலைகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஆண்களின் சதவீதம் மேலும் குறையும்’ என்று வலைதளத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக, ஏற்கனவே பெண்கள் ஆண்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், குரூப் 1,2 மற்றும் 4ல் உள்ள மொத்த பதவியில் கிட்டத்தட்ட 70% இடத்தை பெண்கள் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு – இன்றைய நிலவரம்!

இது தவிர இருபாலருக்கும் அரசு வேலைகளில் வாய்ப்புகளை வழங்குவதற்காக சம அளவு இடஒதுக்கீடுகளை பின்பற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் ஆண் போட்டியாளர்களின் மனக்குமுறல்கள் அனைத்தும் மீம்ஸ்கள் வாயிலாகவும், #Justiceformenin என்ற ஹேஷ்டேக் மூலமாகவும் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!