மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு - கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு - கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!

இப்போது 7வது சம்பள கமிஷனின்படி, 34% அகவிலைப்படி (DA) உயர்வை பெற இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் சிறப்பு ஊதியத்தை சேர்க்காத அகவிலைப்படி உயர்வு கணக்கீடு முறை குறித்த சில முக்கிய விவரங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

அகவிலைப்படி கணக்கீடு

கடந்த வாரத்தில், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி (DA) தொகை 34% என உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால் அகவிலைப்படி (DA) தொடர்பான மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இருப்பினும் அரசு ஊழியர்கள் DA வரவுக்காக இப்போது காத்திருக்கின்றனர். இப்போது 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு விகிதத்தை 2022 ஜனவரி 1 முதல் 34% என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்!

இந்த அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 34% DA ஆக பெறுவார்கள். இது தொடர்பாக செலவுத் துறையின் அலுவலக குறிப்பாணையில், ‘திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் ‘அடிப்படை ஊதியம்’ என்பது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7வது CPC பரிந்துரைகளின்படி பே மேட்ரிக்ஸில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பெறப்படும் ஊதியம் ஆகும்.

அகவிலைப்படியானது ஊதியத்தின் ஒரு தனித்துவமான அங்கமாகத் தொடரும். மேலும் 50 பைசா மற்றும் அதற்கும் மேலான பின்னங்களை உள்ளடங்கிய அகவிலைப்படியின் கணக்கில் செலுத்தப்படும் தொகையானது அடுத்த உயர் ரூபாய்க்கு ரவுண்ட் செய்யப்படலாம் என்றும் 50 பைசாவிற்கும் குறைவான பின்னங்கள் புறக்கணிக்கப்படலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மார்ச் மாத சம்பளத்துடன் அகவிலைப்படியின் நிலுவைத் தொகை செலுத்தப்படாது என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசில் தேர்வில்லாமல் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை..!

இதற்கிடையில் அகவிலைப்படி உயர்வு உத்தரவு, பாதுகாப்பு சேவைகள் மதிப்பீட்டில் இருந்து செலுத்தப்படும் சிவில் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் பாதுகாப்பு சேவைகள் மதிப்பீடுகளின் தொடர்புடைய தலைவரிடம் செலவினங்கள் வசூலிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆயுதப்படை பணியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் முறையே தனித்தனி உத்தரவுகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here