இந்தியன் வங்கியில் 312 காலிப்பணியிடங்கள் – ரூ. 89,890 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்தியன் வங்கியில் 312 காலிப்பணியிடங்கள் - ரூ. 89,890 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் வங்கியில் 312 காலிப்பணியிடங்கள் - ரூ. 89,890 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் வங்கியில் 312 காலிப்பணியிடங்கள் – ரூ. 89,890 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது இந்தியன் வங்கியில் மேலாளர்கள், தலைமை மேலாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

IT வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 312 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பில், இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு துறைகளில் மூத்த மேலாளர்கள், மேலாளர்கள், தலைமை மேலாளர்கள் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indianbank.in என்ற இணையதளத்தில் ஜூன் 14 அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், இந்தியன் வங்கி அதன் விருப்பப்படி தேர்வு முறையை முடிவு செய்யும். மேலும், விண்ணப்பங்களின் சுருக்கப்பட்டியலைத் தொடர்ந்து நேர்காணல், எழுத்து அல்லது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 89,890 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இந்த பதவிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்ப முறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் அல்லது CA தகுதி அல்லது தொடர்புடைய முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:
 • மூத்த மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்சம் 38 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
 • மேலாளர் பணிகளுக்கு 23 முதல் 35 வரையும், உதவி மேலாளர்களுக்கு வயது வரம்பு 20 முதல் 30 ஆண்டுகள் வரையும் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
 • புதியவர்கள் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
 • மற்ற பதவிகளுக்கு முன் அனுபவம் தேவை.
 • இந்த ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் தற்போதைய இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு உட்பட்டது.
 • அவை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tech Mahindra நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை தயார் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

விண்ணப்ப முறை:
 • IBPS போர்ட்டலில் உள்நுழையவும்.
 • முகப்புப் பக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி SO ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 • தேவையான விவரங்களை வழங்குவதன் மூலம் IBPS போர்ட்டலில் பதிவு செய்யவும்
 • கணக்கில் உள்நுழைந்து, படிவத்தை நிரப்புவதன் மூலம் விரும்பிய பதவிக்கு விண்ணப்பிக்கவும்.
 • ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்
 • விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
 • டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், UPI அல்லது வேறு ஏதேனும் முறையைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம்:

இந்தியன் வங்கி SO ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 850 ஆகும்.
மேலும் SC/ST/PWBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சலுகைக் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பல விண்ணப்பங்கள் இருந்தால், சமீபத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மட்டுமே தக்கவைக்கப்படும்.

சம்பளம்:
 • ஸ்கேல் 1 பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36,000 முதல் ரூ.63,840 வரை சம்பளம் கிடைக்கும். இரண்டாம் நிலை வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48170 மற்றும் ரூ.69,810 என்ற வரம்பில் சம்பளம் கிடைக்கும்.
 • ஸ்கேல் 3 லெவல் வேலைகளுக்கு ரூ.78,230 ஆகவும், ஸ்கேல் 4 லெவல் வேலைகளுக்கு ரூ.89,890 ஆகவும் சம்பளம் வழங்கப்படும்.
 • இது தவிர DA, CCA, HRA / குத்தகைக்கு விடப்பட்ட தங்குமிடம், விடுப்புக் கட்டணச் சலுகை, மருத்துவ உதவி, மருத்துவமனை பலன்கள், ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பிற தேவைகள் ஆகியவை வங்கியின் விதிகளின்படி ஏற்றுக்கொள்ளப்படும்.

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!