3000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் – அரசின் திடீர் உத்தரவு!

0
3000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - அரசின் திடீர் உத்தரவு!
3000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - அரசின் திடீர் உத்தரவு!
3000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் – அரசின் திடீர் உத்தரவு!

3000 ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான மாநில அரசின் உத்தரவு குறித்து தற்போது நீதிமன்றத்தில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் குறித்த கோரிக்கையை வைத்திருந்தனர். சத்தீஸ்கர் கல்வித்துறையில் ஆசிரியர்களாக பணி பதவி உயர்வு பெற்று 3000 ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இவர்களில் பதவி உயர்விற்கு பிறகு கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம் குறித்த உத்தரவு வெளியிடப்பட்டது. பணியிட மாற்ற திருத்தம் தொடர்பான ஆசிரியர்கள் விண்ணப்பித்தவுடன் மதிப்பாய்வு குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு இதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் செப்டம்பர் 4ம் தேதி அன்று மாநில அரசு ஆனது மாற்றம் செய்யப்பட்ட பணியிட மாற்ற ஆணைகளை சட்டவிரோதம் காரணம் காட்டி ரத்து செய்தது. இதனால் 900 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் தொடர்ந்து பணியாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.500க்கு விற்பனை – இதை உடனே முடியுங்க!! டிச.31 கடைசி நாள்!!

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மாநில அரசு அவர்களுக்கான அனுமதியை மறுத்து விட்டது. மேலும் டிசம்பர் 5ம் தேதி விசாரணையில் உயர்நீதிமன்றம், மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் 10 நாட்களுக்குள் பணியை தொடர அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சுமார் 3000 ஆசிரியர்கள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!