பட்டாசு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு – 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று!

0
பட்டாசு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு - 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று!
பட்டாசு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு - 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று!
பட்டாசு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு – 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை திறக்க தடையில்லா சான்று அவசியம். இதற்கு அரசின் 30 விதிகள் பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று அளிக்கப்படும்.

தீபாவளி பண்டிகை:

தமிழகத்தில் வரும் நவ.4 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கும் விதமாகவும் மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளவர்கள் உடல்நிலை காரணமாகவும் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தீபாவளி பண்டிகை அன்று காலை 1 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அன்றாட கூலிவேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வேலையை இழந்துள்ளனர்.

ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் – “மாஸ்க் ஆதார்” முழு விவரம்!

அதனை தொடர்ந்து பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலம் நெருங்குவதால் தற்காலிக பட்டாசு கடை திறக்க வியாபாரிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அவ்வாறு திறப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உள்ள 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளானது வெடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக தீயணைப்புத்துறை விதிமுறைகளை வகுத்துள்ளது.

  • வெடிபொருள் சட்டத்தின்படி பட்டாசு கடை அமைக்க கல் மற்றும் கான்கிரீட் கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
  • அந்த கட்டடத்தில் மின்விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • எண்ணெய் விளக்குகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.
  • கடையின் இரு புறங்களிலும் ஆட்கள் செல்லும் அளவிற்கு வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற்றிருக்கும் கடையில் வேறு எந்த பொருட்களும் விற்பனை செய்ய கூடாது.
  • தரைத்தளத்தில் மட்டுமே பட்டாசுகள் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
  • லிப்ட் மற்றும் படிக்கட்டுகளுக்கு அருகே வைத்து விற்பனை செய்யக்கூடாது.
  • அதேபோல், திருமண மண்டபம், திரை அரங்குகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் பட்டாசு வைக்க கூடாது.
  • பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கு குறைவாக இருக்க கூடாது.
  • அதேபோல், 25 சதுர மீட்டருக்கு அதிகமாக இருக்க கூடாது.
  • ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்தபட்சம் சுமார் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • உதிரி பட்டாசுகளை பட்டாசு கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
  • இங்கு புகைபிடிக்க கூடாது என்ற எச்சரிக்கைப் பலகை பட்டாசு கடை முன் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • பட்டாசு கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வெடி மற்றும் துப்பாக்கி வெடித்து காட்டக் கூடாது.
  • மேலும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட வைக்க கூடாது.
  • அலங்காரம் செய்யும் விதமாக அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது.

தமிழக அரசு பள்ளிகளில் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

  • அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்திருக்க கூடாது
  • பட்டாசு கடையின் அருகே தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும்.
  • பட்டாசு கடைகளில் குறைந்தது 2 தீயணைப்பு கருவிகள் இருக்க வேண்டும்.
  • மேலும் இரு வாலிகளில் மணல் வைத்திருக்க வேண்டும்.
  • இரு வாலிகளில் தண்ணீர் வைத்திருப்பது அவசியம்.
  • கடை உரிமத்தை தணிக்கையின் போது அலுவலர்களின் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மேலும், இருப்பு தணிக்கை பதிவேடு முறையே பின்பற்ற வேண்டும்.
  • தற்காலிக பட்டாசு கடை திறக்க தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாக மற்றும் காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • இத்தகைய விதிகளை மீறி கடை திறப்பவர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது. மேலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இவ்வாறு 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே தீயணைப்பு துறையினரால் தடையில்லா சான்று வழங்கப்படும். அந்த சான்று பெற்றால் மட்டுமே தற்காலிக பட்டாசு கடை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தீயணைப்புத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!